• புதியவை

    [இலுமினாட்டி 35] டைட்டானிக்கும் உலக அரசியலும் ( Titanic & World Politics

    என் வாசகர்களுக்கு வணக்கம்.  எல்லா பதிவையும் படித்து வருகிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி. இந்த உலக அரசியல் பற்றிய விழிப்புணர்வு நம்மை இலுமிணாட்டிகளின் மாய வலையிலிருந்து தப்பிக்கவைக்கும். அவர்கள் நம் வாழ்வை சீரழித்து வருகிறார்கள் எல்லா வழிகளிலும். இப்பொழுதைய பதிவில் ட்லண்டிக் பெருங்கடல் பேரழகாய் ஒய்யாரமாக பயணம் செய்த டைட்டனிக் பற்றி பார்ப்போம்.
    இவளின் ஒய்யாரப் பயணம்
    15 ஏப்ரல் 1912, அதிகாலை 2:20 ல் நிறைவு ஏய்தியது.
    இந்நிகழ்விற்கு காரணமாகவும் இலுமிணாட்டிகளே இருந்துள்ளனர். 






    இவர்கள் எப்பொழுதுமே ஒரு கல்லில் பல மாங்கா அடிப்பவர்கள். விழுந்த ஒரு மாங்காவை பற்றி மட்டும் இதில் பார்ப்போம்.
    US Federal Reserve bank
         இந்த மாங்காவை பற்றி தான் பார்க்கபோகிறோம். இங்கிலாந்து மண்ணில் ஏற்கனவே ரிசர்வ் வங்கி உருவாக்கிய ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தார் அடுத்து அமேரிக்காவுக்கு குறிவைக்கின்றனர். வங்களில் பொய்மையை அறிய எனது பழைய பதிவை வாசியுங்கள். நம்ம இலுமிணாட்டிகள் அவங்க இருப்பது அனைவருக்கும் தெரிய கூடாதுனு முடித்தவரை சட்டப்படி தான் செய்வார்கள். சில நேரம் சட்டங்களை உருவாக்கியும் செய்வார்கள். அதன்படி யூனிடட் சிடேட் பெடரல் ரிசர்வ் அமைக்க ஏற்பாடு செய்துகொண்டு இருந்தாங்க. அப்போ அதற்கு எதிராக நின்றவர்கள் முக்கியமாக மூன்று பேர். Benjamin Guggenheim,  Isa strauss, Jecob Astor.  இவர்களால் 1912 ஏப்ரல் மாத தொடக்கத்தில்  அந்த வங்கி திட்டம் ஊத்தி மூடப்பட்டது.
    TITANIC SECRET

    டைட்டானிக் பயணம்
         அதே ஏப்ரலில் இம்மூவரும் டைட்டானிகில் பயணம் செய்தனர். மூன்று பேரும் தென் அட்லாண்டிக் பெருங்கடலில் 15 தேதி கப்பலோடு மூழ்கினர்.
    மீண்டும் ரிசர்வ் வங்கி
    டிசம்பர் 1913 ல் US Federal Reserve Bank செயல்பட ஆரம்பித்தது. இதுவே விழுந்த மாங்காய்களில் ஒன்று.
    எப்போதுமே சொல்லிட்டு செய்ர இலுமிணாட்டிகள் இதையும் அப்படி தான் செய்தாங்க.
    Morgan Robertson, 1898ல Futility என்று ஒரு நாவல் வெளியிடுகிறார். அதில் டைட்டன் என்ற மூழ்கடிக்க முடியாத கப்பல் ஏப்ரல் மாதத்தில் ஒரு பனிபாறையில மோதி மூழ்குது,  உயிர் காக்கும் படகுகள் குறைவா இருந்ததால நிறைய பேர் இறந்து போறாங்க. இது கதை.
    இது பதினான்கு ஆண்டுகள் கழித்து உண்மையானது டைட்டானிக்.
    நான் ஜெகப் அஸ்டர் என சொல்லியத கவனித்தீர்களா. அஸ்டர் குடும்பமும் இலுமிணாட்டி குடும்பங்களில் ஒன்று.அப்போ ஏன் இவரும் அந்த வங்கி வரவிடாமல் தடுக்க முயர்ச்சித்தார். அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
    அடுத்துவரும் பதிவுகளில் இவர்களின் அடையாளங்கள் பற்றியும் சொல்ல இருக்கிறேன்.
    இலுமிணாட்டி பற்றி விவரம் தெரிந்தவர்கள் என்னை முகநூலில் தொடர்பு கொள்ளவும்.
    நன்றி.

    2 comments:

    1. உலகம் பூராக ஜனநாயகத்தை, ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலின் பணநாயகம் வெல்லும்.

      அன்று தமக்குச் சொந்தமான கிழக்கிந்தியக் கொம்பனி மூலம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைக் கொள்ளையடித்த ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், இன்று அமெரிக்க டாலரை அச்சிடும் தமக்குச் சொந்தமான பெடரல் ரிசர்வ் (FEDERAL RESERVE) போன்ற தனியார் வங்கிகள் மூலம், பெறுமதியற்ற கடதாசி நோட்டுக்களை, பில்லியன் கணக்கில் அச்சிட்டு, உலகைக் கொள்ளையடிக்கிறார்கள். அத்துடன் இல்லாமையிலிருந்தே உருவாக்கிய, தமக்குச் சொந்தமான கடனட்டைகளை, வங்கிகளுக்கு விஸ்தரித்து, ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், சாதாரண மக்களை, பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கின்றார்கள்.

      கடனில்லாத பன்னாட்டு நிறுவனங்கள் கிடையாது. இல்லாமையிலிருந்தே உருவாக்கிய கடன்களால் வர்த்தக நிறுவனங்களும், தொழிலாளர்களும் கடன்காரர்களாக மாற்றபடுவதோடு இக்கடன்கள் அதிகரிக்கப்படுமே அன்றி மீளச் செலுத்தப்படுவதில்லை.

      இதனால் வர்த்தக நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர் எதிராகச் சண்டையிட்டுக் கொள்வார்களே தவிர, வர்த்தக நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டு ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கு எதிராகப் போராடமாட்டார்கள்.

      உலகம்பூராகவும், அனைவரும் இலகுவில் கட்டுப்படுத்தப்பட்டு, ஆளப்படக் கூடியவர்களாக ஆக்கப்பட்டு, பயத்தினூடாகவும், அச்சுறுத்தியும், நலமடிக்கப்பட்ட சமூகம் உருவாக்கப்படுகின்றது, மக்களின் சிந்தனை, நிகழ்கால வேலைப்பழுவுடனும், அடுத்தநேரச் சாப்பாட்டுடனும் மட்டுப்படுத்தப்படுகின்ற சூழ்நிலை உருவாக்கப்படுகின்றது.



      - நல்லையா தயாபரன்

      ReplyDelete
    2. 1910ம் ஆண்டு.சக்திவாய்ந்த 7 பெரும் பணக்காரர்கள் ரகசியமாக சந்தித்தார்கள். அமெரிக்காவின் ஜெக்கிள் தீவில் இந்த சந்திப்பு நடந்தது. ரொத்ஸ்சைல்ட் , ராக்கபெல்லர், ஜே.பி.மோகன், ஆகிய மூன்று பெரிய பணக்கார குடும்பங்கள்.சட்டவிரோதமாக தாங்கள் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் பாதுகாப்பதற்கும், அந்தப் பணத்தை கொண்டு மேலும் மேலும் கொள்ளை லாபம் அடிப்பதற்கும் ஒரு வங்கி உருவாக்குவதென முடிவு செய்தார்கள்.

      இந்த மூன்று பெரும் வங்கி உரிமையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அடுத்த 3 ஆண்டுகளில் உதயமானதுதான் இன்றைக்கு ‘பெட் ரிசர்வ்’ என்று ஊடகங்களால் புகழ்ந்து தள்ளப்படுகிற அமெரிக்க மைய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கி.அரசாங்கத்திற்கு சம்பந்தமே இல்லாத, முற்றிலும் தனியார் முதலாளிகளின் லாபத்திற்காக மட்டுமே இப்படி ஒரு வங்கியை உருவாக்குவதற்கு, அன்றைய தினம் அமெரிக்காவின் சட்டம் இடம் கொடுக்கவில்லை என்ற போதிலும், ஜனாதிபதி உட்ரோ வில்சன் நாடாளுமன்றத்தை நிர்ப்பந்தித்தார். பணக்காரர்களின் நாடாளுமன்றம் மிகப் பெரிய விவாதம் இல்லாமல், 1913ம் ஆண்டு கிறிஸ்துமஸ்க்கு இரண்டு நாள் முன்பு நள்ளிரவில் இதற்கு ஒப்புதல் அளித்தது.

      அமெரிக்கர்களின் தலைவிதியை மட்டுமல்ல, பிற்காலத்தில் ஒட்டுமொத்த உலகின் நிதி கட்டமைப்பையும் தனது காலடியின் கீழ் கொண்டுவரப் போகும் பெடரல் ரிசர்வ் ஆக்ட் என்ற அந்த மசோதாவை, கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு செல்லும் அவசரத்தில் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் படித்து பார்க்காமலேயே கைதூக்கி நிறைவேற்றினார்கள்.அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு முரணாக, அந்நாட்டின் நிதி கட்டமைப்பையும், புதிதாக ஒரு நாணயத்தை உருவாக்கும் பொறுப்பையும் தனியார்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த வங்கியிடம் அளித்தது அமெரிக்க நாடாளுமன்றம்.முற்றிலும் சட்டவிரோதமாக உதயமான பெடரல் ரிசர்வ், பிற்காலத்தில் அனைத்து சட்டங்களையும் தீர்மானிக்கின்ற சக்தி கொண்டதாக மாறியது.

      ‘நான் மிகவும் சோகமான மனிதனாக இருக்கிறேன். தெரிந்தே எனது நாட்டை நாசமாக்கிவிட்டேன். ஒரு மாபெரும் தொழில்வள நாடான அமெரிக்கா முற்றிலும் வங்கிக் கடன் முறையால் கட்டுப்படுத்தப்படும் நாடாக மாறுவதற்கு காரணமாகிவிட்டேன். ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியும் இப்போது வெகுசில தனிநபர்களின் கைகளுக்கு சென்றுவிட்டது. இந்த உலகிலேயே ஒரு வங்கியால் கட்டுப்படுத்தப்படுகிற, சுதந்திரமான கருத்துக்களுடன் செயல்பட முடியாத, பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப உறுதிமொழிகள் அளிக்க முடியாத, முற்றிலும் சில ஆதிக்க மனிதர்களால் வழிநடத்தப்படுகிற அரசாங்கமாக அமெரிக்க அரசாங்கம் மாறிவிட்டது...’ என்று பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அதே உட்ரோவில்சன் எழுதினார்.

      1860களில் அமெரிக்காவின் வங்கிக் கட்டமைப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன்.. அப்போதைய காலச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு, வங்கிகளை நாட்டின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். வங்கி நடத்துபவர்களுக்கு வட்டி என்ற பெயரில் பெருவாரியான பணம் போவதை அவர் தடுத்து நிறுத்தினார். லிங்கன் படுகொலை செய்யப்பட்ட பிறகு நிலைமை மாறிவிட்டது. மக்கள் நடமாடும் வீதிகளிலிருந்த நிதி அதிகாரங்கள் முற்றிலும் பெருவங்கிகளின் உரிமையாளர்கள் குடி கொண்டிருக்கும் வால்ஸ்டிரீட் எனும் வீதிக்கு மாறியது.அங்கிருந்தே இன்றைக்கு உலகம் முழுவதும் வங்கிகளின் பொருளாதார யுத்தம் உலக நாடுகள் மீது ஏவப்பட்டிருக்கிறது. மனிதகுலத்தின் மீது நிதியுத்தம் கட்டவிழ்த்துவிடப்படுகிறது. டாலர் எனும் பணத்தின் மூலம் உலகம் முழுவதும் சந்தையை கட்டுப்படுத்துகிற பெடரல் ரிசர்வ் எனும் அமெரிக்காவின் மத்திய வங்கி, இங்கிருந்தே கட்டுப்படுத்தப்படுகிறது.

      2013 டிசம்பர் 23ம்தேதியன்று பெடரல் ரிசர்வ் தனது நூறாவது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறது. இந்த நூறு ஆண்டுகளில் உலகம் முழுவதும் நிதித் துறையில் மிகப் பெரும் போரை கட்டவிழ்த்துவிட்டது பெடரல் ரிசர்வ். உலகப் பொருளாதாரங்களின் லாபங்களையெல்லாம் உறிஞ்சி எடுத்துக் கொண்டது; கோடிக்கணக்கான மக்களின் உழைப்பையெல்லாம், விலைவாசியை உயர்த்தி சுரண்டிக் கொண்டது.இதைத்தான் நிதித்துறை தொடர்பான வரலாற்று அறிஞர் கரோல் குய்க்லி, தனது ‘துயரமும் நம்பிக்கையும்‘ என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘நிதி மூலதனத்தின் அடிப்படையில் இயங்குகிற இன்றைய வங்கிகள் தமது ஆதிக்கத்தை அனைத்துத் துறைகளிலும் பரப்பி வருகிறது;

      உலகம் முழுவதும் உள்ள நிதிக் கட்டமைப்பை பெரு வங்கிகளின் உரிமையாளர்களின் கைகளுக்குள் கொண்டு வருவதற்காக ஒவ்வொரு நாட்டின் அரசியல் கட்டமைப்பையும் தகர்க்கவோ அல்லது தமக்குச் சாதகமாக மாற்றவோ முயற்சி நடக்கின்றது.

      ReplyDelete

    Total Pageviews