• புதியவை

    [இலுமினாட்டி 34]பொம்மைகளும் உளவியலும்

    பெற்றோர்களே குழந்தைக்கு என்ன பொம்மை வாங்க போறீங்க..?
    நாமெல்லாம், குழந்தையாக இருந்த போது ஒரு சில பொம்மைகளே கடைகளில் விற்கப்பட்டன, நம் அப்பாக்களால் என்ன பொம்மை வாங்கி தர முடிந்ததோ அதை நாம் பொக்கிசமாக கருதி விளையாடினோம், 




    அப்போதெல்லாம் நமது பாரம்பரிய விளையாட்டு பொம்மைகள் பல புழக்கத்தில் இருந்தது . (எ.கா) மரப்பாச்சி பொம்மை, சொப்பு சாமான், கிலுகிலுப்பை, இராட்டினம் மற்றும் பல, அது மட்டுமல்லாமல் வெளிநாட்டு தாயாரிப்பு பொம்மைகளான ரோபோ பொம்மைகள், நெகிழி உறுவ பொம்மைகள் இருந்தன. இவைகளையே நாம் பெரும்பாலும் பயன்படுதினோம், ஆனால் 1995குப் பிறகு பிறந்தவர்கள் , பொம்மைகளால் மாபெரும் உலக அரசியலுக்கும், உலகவர்த்தகத்துக்கும் உள்ளானாவர்கள்.
    பொம்மைகளை வைத்து வர்த்தகம் இருக்க வாய்ப்புண்டு, ஆனால் அரசியல் எப்படி என்று தானே சிந்திகிறீர்கள்..? ஆம் நம் குழந்தைகள் விளையாடும் பொம்மைகளுக்கு பின்னால் ஒரு மறைக்கப்பட்ட அரசியல் உண்டு.அதுவும் சாதாரண அரசியல் அல்ல, நம் சமுதாயப் போக்கையே மடை மாற்றிய அரசியல்..
    நான் விடயத்திற்கே வருகிறேன் , இந்த அரசியலுக்கு பெயர் “குழந்தைகள் மீதான பாலியல் கொடுமை” (Hypersexualization or children) . இந்த காலத்து குழந்தைகள் ஊடகங்கள் மூலம் பாலியல் சார்ந்த தவறான புரிதலால் வளர்கப்படுகிறார்கள், அதாவது ஒரு பெண் குழந்தை ஆறு வயது நிறைவடையும் போதே பாலியல் வெளிப்பாடு (sexual appeal) தான் அவர்களது மதிப்பை முடிவு செய்கிறது என்ற சிந்தனை கொள்கிறார்கள்.பெண்களை ஒரு பாலியல் பதுமைகளாக உணர வைப்பதே இந்த அரசியல். இதை திட்டமிட்டு ஊடகங்கள் மூலமாக பரப்புகிறார்கள் .அதாவது குழந்தைகள் பார்க்கும் கார்டூன் படங்களில் கூட பெண் கதாபாதரங்களை மிகவும் கவர்ச்சியாக (அறைகுறை ஆடைகளுடன்) காட்டுகிறார்கள். இதன் விளைவாக சராசரியாக ஒரு ஆறு வயது பெண் சுய பாலின கவர்ச்சி உணர்தலுக்கு (self-sexual realization ) ஆளாகிறார்கள். அதாவது தனது பாலியல் வெளிப்பாடே அவர்களுக்கு பாராட்டுகளை வாங்கி தரும் என்ற நம்பிக்கைக்கு உள்ளாகிறார்கள். இது இளம் பெண்களிடமும்(teen age), பெண்களிடம் தற்போது இயல்பாக பார்க்க இயலும். இது சமுதாயத்துக்கு ஒரு தவறான வழிகாட்டுதலை தருகிறது. குறிப்பாக ஆண்களுக்கு பெண்கள் மீதான பார்வையை மாற்றுகிறது. சொல்லவா வேண்டும், இப்போது வரும் தமிழ்ப்பாட்டுகளின் சாரமே பெண்களை இழிவுபடுத்துவதும், கேலி செய்வதும், திட்டுவதுமாகவே உள்ளது இல்லை என்றல் அவர்களின் உடல் அழகை போற்றுவதாக உள்ளது ..
    தற்போதுள்ள குழந்தைகள் இணையம், ஸ்மார்ட்போன், டேபிலட், போன்று பலசாதனங்களை பயன்படுத்துகிறார்கள் , இவர்கள் இவைகளால் பெரிதும் தாக்கத்துக்குள் உள்ளாகிறார்கள். இவர்கள் பார்க்கும் அனைத்தும் உங்கள் குழந்தைகளை தவறான பாதையில் இட்டு செல்கிறது .
    தற்போதுள்ள குழந்தைகள் இந்த கார்டூன் ஊடகங்களில் வரும் பொம்மைகளை தான் பெரிதும் விரும்பி வாங்க ஆசைபடுகிறார்கள், (எ.கா) காமிக் கதாபாத்தரங்கள், இல்லை என்றல் பெண் குழந்தைகள் பார்பி பொம்மைகள். காமிக் பொம்மைகள் குழந்தைகளுக்குள் வக்கிரத்தை, கோபத்தை, திமிரை உருவாக்கும் . பார்பி பொம்மைகள் உங்கள் பெண் குளந்தைகளை கவர்ச்சிப்பாதையில் இட்டு செல்லும்.அவர்களுக்கு இவைகள் பொருப்பு, அன்பு போன்ற நல்ல குணங்களை தருவதில்லை..
    முடிந்த வரையில் உங்கள் குழந்தைகளுக்கு விலங்கினங்கள் சார்ந்த பொம்மைகள் (stuffed toys that resemble animals ) எ.கா டெடி பொம்மைகள்,..இல்லை என்றல் வீட்டில் வளர்ப்புபிராணிகள் எதாவது வளருங்கள் , அது உங்கள் குழந்தைக்கு அன்பு , இயற்கையை பற்றிய புரிதல் , அறிவியல் தெளிவு , போன்றவற்றை உருவாக்கும். முடிந்த வரை நீங்கள் தொலைக்காட்சியில் நேரம் செலவிடுவதை நிறுத்துங்கள்,
    இந்த சூப்பர் சிங்கர் மற்றும் நடன நிகழ்ச்சி போன்ற போட்டிகளில் உங்கள் குழந்தைகளை பங்கேற்க்க வைக்க எண்ணாதீர்கள், முடிந்த வரை அந்த நிகழ்சிகளை தவிருங்கள், இது போன்ற நிகழ்சிகளில் வரும் குழந்தைகளை அதீத கவர்ச்சி, பகட்டு வாழ்கை வாழ்வது போன்ற பிம்பம் உருவாக்கப்படுகிறது. அந்த குழந்தைகளை பார்த்து வளரும் குழந்தைகள் அதே போன்ற அர்த்தமற்ற வாழ்கையை தேர்வு செய்கிறார்கள். இந்த தொலைக்காட்சி குழந்தை நட்சத்திரங்கள் பலர் ,பருவ வயதில் திரைத்துறையில் கவர்ச்சி நடிகைகள் ஆவார்கள் ( wait and watch, every pop star has become one in Hollywood ). இதை பார்த்து வளரும் உங்கள் குழந்தைகளும் தவறாக வழிநடத்தப் படுவார்கள்.
    தற்போதுள்ள தொலைக்கட்சிகளில் பெற்றோர்களை மதிக்காத பையனோ. பெண்ணோ தான் கதாநாயகன் , கதாநாயகி மற்றும் அப்பா , அம்மாவை கிண்டல் கேலி செயும் காட்சிகள் பல இடம்பெறுகிறது , இது உங்கள் குழந்தைக்கு உங்களை மதிக்கணும் என்ற எண்ணத்தை சுத்தமாக இல்லாமல் செய்துவிடும். நிறைய குழந்தைகளிடம் பேசுங்கள் , ஒரு நாளைக்கு ஒரு தமிழ் கதை சொல்லுங்கள், அது வரலாறு மற்றும் பஞ்சதந்திர
    தத்துவக் கதைகலாக கூட இருக்கலாம். கல்வி என்பது நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிகொடுப்பது , பள்ளிக்கூட , அடிமை உளவியல் மெக்காலேயின் பாடத்திட்டம் அல்ல என்பதை மறக்காதீர்கள்.
    உங்கள் மகள்களுக்கு கற்பும் , தமிழ்ப் பண்பாடும் . உங்கள் மகன்களுக்கு ஒழுக்கமும் , வீரம் சார்ந்த கருத்துக்களை புரிய வையுங்கள், திருக்குறளை மனபாடம் செய்ய வைப்பதை தவிர்த்து , அதன் அற்புதமான’ கருத்துக்களை உங்கள் குழந்தைகளுக்கு புரிய வையுங்கள் . பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் தருவதை உங்கள் குழந்தைகளிடம் பகிறாதீர்கள்.
    முடிந்தவரையில் அன்னியர்களின் எந்த ஒரு கருத்தையும் உங்கள் குழந்தைகளிடம் பதிய வைக்காதீர்கள் . உங்கள் குழந்தைகளின் எதிர்காலமே தமிழர்களின் எதிர்காலம், அடுத்த தலைமுறை சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள் . உங்களைச் சுற்றி நடக்கும் இலுமினாட்டி(illuminati) அரசியலை தேடுங்கள் , விடைகள் கிடைக்கும். அதை புரிந்துகொள்ள முயற்சியுங்கள், உலகஅரசியல் நம்மை தாக்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை.

    - பாரிசாலன்,(9677913233), தமிழர் உலகம் (இனவியல் அமைப்பு ).

    No comments:

    Post a Comment

    Total Pageviews