• புதியவை

    [இலுமினாட்டி 31] கார்ல் மார்க்ஸ் (Karl Marx) இலுமிணாட்டியா - பாகம் 2


    தனியார் சொத்து பறிக்கப்பட்டு பொதுவில் வைக்க வேண்டும் என்று முதலில் வாய்திறந்தவர் Hess. நல்ல விசயம் தானே என்று நினைத்து மேலும் இவரைப் பற்றிப் படித்தால் இதை யூத மதம், இனவெறி மற்றும் வர்க்க போராட்டித்தின் வழி சாதிக்க  வேண்டும் என்கிறார். இந்த தனியார் சொத்து பறிப்பு பொதுவில் வைக்கும் சங்கதியெல்லாம் யூதர்களுக்கு பொருந்தாது என்கிறார்.




    புதிய உலக அதிகாரத்தை இவர் குறிப்பிடும் சோசலிசத்தின் மூலம் வென்றெடுக்க முடியும் என்கிறார். புதிய உலக அதிகாரம் (New World Order) என்பது சாத்தானிய வழிபாடு செய்யும் இலுமினாட்டிகள்  இந்த உலகத்தை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவர முன்னெடுக்கும் திட்டம். Hess சோசலிசத்தின் மூலம் உலக மக்கள் அனைவரையும் நாடுகளின் எல்லைகளில் இருந்து விடுவித்து ஒரேத் தலைமையின் கீழ் கொண்டுவருவதன் மூலம் புதிய உலக அதிகாரத்தை சாதிக்க முடியும் என்கிறார்.  இதற்கு சமூகத்தை வர்கங்களாக பிரித்து அவைகளை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு அவற்றுக்கிடையே ஒற்றுமை இல்லாமல் பார்த்துகொள்ளவேண்டும் என்று வலியுருத்துகிறார். இந்த சமூக பாட்டாளி வர்க போராட்டத்தை எதிர்பவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நான் வாலை கையில் எடுப்பேன் என்கிறார். உலகம் முழுவதும் இத்தகைய சமூக பாட்டாளி வர்க போராட்டங்களை முன்னெடுக்க Rothschilds பொருளதவி செய்யும் என்றும் சொல்கிறார்.

    யார் இந்த Rothschilds ? என்றுப் பார்த்தால் ஜெர்மனியின் மிக மிக பாகாசுர வங்கி குழுமம். Mayer Amschel Rothschild என்கிற யூதரால் ஜெர்மனியில் 1760-களில் தொடங்கப்பட்ட வங்கி வணிக குழுமம். இன்றைக்கும் இந்த குழுமமே ஐரோப்பாவின் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மறைமுகமாக கட்டுப்படுத்தும் கரங்களில் ஒன்று. இதையெல்லாம் படித்ததும் மேலும் ஒரு சந்தேகம் கிளம்பிவிட்டது. ஒருவேளை இலுமினாட்டி குறித்த புத்தகங்கள் யூத வெறுப்பு பிரச்சாரங்களையும் செய்கின்றனவோ என்று.
    இதற்கும் அவைகள் ஒரு துப்பைத் தருகின்றன அது தால்முட். யூதர்களின் புனித நூல்களில் ஒன்று. இந்த நூல் உலக வளங்கள் எல்லாம் யூதர்களின் கரங்களுக்குள் வரவேண்டும் என்கிறது. இதை சாதிக்க பாட்டாளி வர்க போராட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்கிறார் மார்க்சின் மற்றொரு வழிகாட்டி Levi Baruch. உலக அரசாங்கங்களை கட்டுப்படுத்தி தனியார் சொத்துக்களை பறித்து தங்கள் (யூத) கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும் அதற்கு மார்க்சிய சித்தாந்தத்தை மறைமுகமாக  பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இவர் கைப்பட மார்க்சுக்கு எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த உடனடியாக அந்த கடிதம் விவகாரம் மெளனமாக்கப்பட்டுவிட்டது என்கின்றன இலுமினாட்டிக் குறித்த புத்தகங்கள்.
    அந்த கடிதத்தில் Baruch மேலும் உலக எல்லைகளை உடைத்து, வெவ்வெறு இனம் மொழி கலாச்சாரம் போன்ற வரையரைகளைத் தகர்த்து, அரச குடும்பங்களையும் அரசுகளையும் இல்லாமல் செய்து ஒட்டுமொத்த உலக அதிகாரத்தை நம் கைகளில் (யூத) கொண்டுவரவேண்டும் என்று எழுதியிருந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு ஆதாரமாக வைக்கப்படும் புத்தகம் Les origines secretes du bolchevisme.
    வலுத்தது பிழைக்கும் (Survival of the fittest) என்பது மார்க்சிய சாராம்சங்களில் ஒன்று. இதுதான் டார்வினின் பரிணாமக் கொள்கையின் சாராம்சமும். ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில் இது தால்முத்தின் சாராம்சங்களில் ஒன்றும் கூட. மார்க்ஸ் வெளிப்படையாகவே இதுக் குறித்துப் பேசுகிறார். 1856 ஏப்ரல் 16 தேதியிட்ட People’s Paper-ல் மார்க்ஸ் இப்படி எழுதுகிறார்….

    “The classes and the races too weak to master the new conditions of life must give way……They must perish in the revoluitonary Holocaust”
    இதில் சுவாரசியமான விசயம் டார்வினின் வலுத்தது பிழைக்கும் என்கிற பரிணாமக் கொள்கையும் இலுமினாட்டிகளின் சதி என்கிற குற்றச்சாட்டிற்கு உள்ளாகும் கொள்கை.
    அடுத்த தொடரிலும்.......
    நன்றி - நவீன அலக்சண்டர்

    No comments:

    Post a Comment

    Total Pageviews